/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/குடியிருப்புக்கு மத்தியில் சேதம் அடைந்துள்ள குடிநீர் தொட்டிகுடியிருப்புக்கு மத்தியில் சேதம் அடைந்துள்ள குடிநீர் தொட்டி
குடியிருப்புக்கு மத்தியில் சேதம் அடைந்துள்ள குடிநீர் தொட்டி
குடியிருப்புக்கு மத்தியில் சேதம் அடைந்துள்ள குடிநீர் தொட்டி
குடியிருப்புக்கு மத்தியில் சேதம் அடைந்துள்ள குடிநீர் தொட்டி
ADDED : பிப் 06, 2024 12:15 AM

சிவகாசி : வெம்பக்கோட்டை ஒன்றியம் கங்கர் செவலில் குடியிருப்புகளுக்கு மத்தியில் சேதமடைந்துள்ள மேல்நிலை குடிநீர் தொட்டியை சீரமைக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
வெம்பக்கோட்டை ஒன்றியம் கங்கர் செவலில் 20 ஆண்டுகளுக்கு முன்பு 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு உடைய மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டப்பட்டது. இத்தொட்டியின் மூலமாக கிராமம் முழுவதும் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந் நிலையில் குடிநீர் தொட்டி முற்றிலும் சேதம் அடைந்துள்ளது. குடிநீர் ஏற்றும் போதெல்லாம் தண்ணீர் கசிந்து வெளியேறி துாண்கள் இடிந்து விழும் நிலையில் உள்ளது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ரூ. 20 ஆயிரம் மதிப்பில் தொட்டியின் கீழ் சிமெண்ட் தளம் அமைக்கப்பட்டும் சேதம் அடைந்துள்ளது. பயன்பாட்டில் உள்ள தொட்டி சேதம் அடைந்து இருப்பதால் குடியிருப்புவாசிகள் அச்சத்திலேயே உள்ளனர். மேலும் குழந்தைகள் விபரீதம் அறியாமல் தொட்டியின் அருகிலேயே விளையாடுகின்றனர். எனவே உடனடியாக சேதமடைந்த குடிநீர் தொட்டியை சீரமைக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.