ADDED : மே 11, 2025 05:39 AM
விருதுநகர்: விருதுநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில் பொதுச்செயலாளர் பழனிசாமி பிறந்தநாளை முன்னிட்டு ரத்த தான முகாம் நடந்தது.
அமைப்புச் செயலாளர் ராஜேந்திர பாலாஜி துவக்கி வைத்துப் பேசுகையில், இங்கு பெறப்படும் ரத்தம் எல்லையில் பயங்கரவாதிகளை எதிர்த்துப் போரிட்டு காயமடையும் ராணுவத்தினர், பொதுமக்களுக்குப் பயன்படும்'', என்றார். சிறுபான்மை நலப்பிரிவு பொருளாளர் ஜான்மகேந்திரன் முன்னிலை வகித்தார். ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ரத்த தானம் வழங்கினர். அவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.