/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ ரவுண்டானா இல்லாததால் அடிக்கடி நடக்கும் விபத்து ரவுண்டானா இல்லாததால் அடிக்கடி நடக்கும் விபத்து
ரவுண்டானா இல்லாததால் அடிக்கடி நடக்கும் விபத்து
ரவுண்டானா இல்லாததால் அடிக்கடி நடக்கும் விபத்து
ரவுண்டானா இல்லாததால் அடிக்கடி நடக்கும் விபத்து

மேம்பாலம் வேண்டும்
சுரேஷ், தனியார் ஊழியர்: மதுரை தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் வாகனங்கள் அதிக அளவில் செல்வதுடன், அதிவேகமாக சென்று வருகிறது. ரோட்டை கடக்க நீண்ட நேரம் காத்திருக்க வேண்டி இருக்கிறது. அடிக்கடி விபத்து நடப்பதால் அச்சம் ஏற்பட்டுள்ளது. மேம்பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரவுண்டானா வேண்டும்
ஆறுமுகம், தனியார் ஊழியர்: முக்கு ரோட்டில் நான்கு வழித்தடங்களில் இருந்து வரும் வாகனங்கள், ஆட்கள் குறுக்கும் நெடுக்குமாக கடக்கின்றனர். அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. பலமுறை தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் விபத்து தொடர்ந்து நடக்கிறது. விபத்தை தடுக்க ரவுண்டானா அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
போக்குவரத்துக்கு இடையூறு
பாண்டியராஜன், வக்கீல்: ரோட்டோரத்தில் கடைகாரர்கள், நடமாடும் கடைக்காரர்கள் என ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்திற்கு கடும் நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. வாகனங்கள் கடந்து செல்ல முடியவில்லை. அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. ஆக்கிரமிப்புகளை அகற்றி போக்குவரத்திற்கு இடையூறு இன்றி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.