ADDED : மே 21, 2025 06:20 AM
விருதுநகர் ; கலெக்டர் ஜெயசீலன் செய்திக்குறிப்பு: மாவட்ட நிர்வாகம் சார்பில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் நுாறு சதவீதம் உயர்கல்வியை வலியுறுத்தி கல்லுாரிக் கனவு என்ற தலைப்பில் விழிப்புணர்வு மாரத்தான் மே 24 காலை 6:00 மணிக்கு அரசு மருத்துவக் கல்லுாரி வளாகத்தில் நடைபெறவுள்ளது.ஆண்களுக்கு 12 கி.மீ., பெண்களுக்கு 10 கி.மீ., தூரம்.
இப்போட்டிகளில் தமிழகம் முழுவதிலிருந்தும் மக்கள், இளைஞர்கள், மாணவர்கள் என அனைவரும் கலந்து கொள்ளலாம். முதல் பரிசு ரூ.20 ஆயிரம், 2ம் பரிசு ரூ.15 ஆயிரம், 3ம் பரிசு ரூ.10 ஆயிரம், 4ம் பரிசு ரூ.7 ஆயிரம், 5ம் பரிசு ரூ.5 ஆயிரம் என வழங்கப்பட உள்ளது.இப்போட்டியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் தங்களது விவரங்களைhttps://docs.google.com/forms/d/e/1FAIpQLSdasYWstnFs_F92vdaaBVbYhy7fV0wU8NjWc3G0p1T2KLwIow/viewform?usp=header என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.
விவரங்களுக்கு 86082 -04154, 94864 -54521, 99769- 03873 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம், என்றார்.