/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ ஸ்ரீவில்லிபுத்துார் தேசிய நெடுஞ்சாலை துறை அலுவலகம் மூடல்; அதிகாரிகள் பணியிட மாற்றம் ஸ்ரீவில்லிபுத்துார் தேசிய நெடுஞ்சாலை துறை அலுவலகம் மூடல்; அதிகாரிகள் பணியிட மாற்றம்
ஸ்ரீவில்லிபுத்துார் தேசிய நெடுஞ்சாலை துறை அலுவலகம் மூடல்; அதிகாரிகள் பணியிட மாற்றம்
ஸ்ரீவில்லிபுத்துார் தேசிய நெடுஞ்சாலை துறை அலுவலகம் மூடல்; அதிகாரிகள் பணியிட மாற்றம்
ஸ்ரீவில்லிபுத்துார் தேசிய நெடுஞ்சாலை துறை அலுவலகம் மூடல்; அதிகாரிகள் பணியிட மாற்றம்
ADDED : மே 21, 2025 06:20 AM

ஸ்ரீவில்லிபுத்தூர்; திருமங்கலம்- கொல்லம் தேசிய நெடுஞ்சாலையை, நான்கு வழிச்சாலை பணிக்காக இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் எடுத்துக் கொண்டதால் ஸ்ரீவில்லிபுத்துாரில் இயங்கி வந்த தேசிய நெடுஞ்சாலை துறை அலுவலகம் மூடப்பட்டு அங்கு பணியாற்றிய அதிகாரிகள் மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார் கோவிலுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் இருந்து கேரள மாநிலம் கொல்லம் வரை தேசிய நெடுஞ்சாலை எண் 744 செல்கிறது. இதன் வழியாக ஆண்டுக்காண்டு வாகன போக்குவரத்து அதிகரித்ததால் இந்த வழித்தடம் நான்கு வழிச்சாலையாக மாற்ற இந்திய தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
தற்போது திருமங்கலத்தில் இருந்து ராஜபாளையம் வரை 71.6 கிலோமீட்டர் தூரத்திற்கு நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகள் முடிவடையும் நிலையை எட்டி உள்ளது. பல இடங்களில் மேம்பாலங்கள் அமைக்கும் பணிகள் மட்டுமே முடிவடையாமல் தாமதமாகி வருகிறது.
இந்த என்.எச்.744 ரோட்டினை இந்திய தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் எடுத்துக் கொண்டதால், பல ஆண்டுகளாக ஸ்ரீவில்லிபுத்துாரில் இயங்கி வந்த தேசிய நெடுஞ்சாலை துறை அலுவலகம் மூடப்பட்டு, அங்கு பணியாற்றிய அதிகாரிகள் குழுவினர் ஒட்டுமொத்தமாக மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவிலுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இருந்தபோதிலும் தற்போது திருநெல்வேலி கோட்ட தேசிய நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தின் கீழ் ஒரே ஒரு உதவி பொறியாளர் மட்டும், மாவட்ட நிர்வாகத்தின் தகவல் தொடர்புக்காக நியமிக்கப்பட்டுள்ளார்.
திருமங்கலத்தில் இருந்து கொல்லம் வரை நான்கு வழி சாலை பணிகள் முழுமையாக முடிவடைந்த பிறகு, அந்தந்த மாவட்ட எல்லைக்குள் தற்போதுள்ள ரோடு, மாநில நெடுஞ்சாலைத்துறைக்கு மாற்றப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.