ADDED : ஜன 06, 2024 05:15 AM
விருதுநகர்: முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் ஜவஹர் ராஜ் செய்திக்குறிப்பு: மாவட்டத்தின் அருப்புக்கோட்டை, ராஜபாளையம், சிவகாசி, விருதுநகர் ஆகிய தலைமை தபால் நிலையங்களில் புதிய ஆதார், திருத்தம் செய்யும் பணிகள் இன்று (ஜன. 6) முதல் காலை 8:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை நடக்கும்.
பெருகி வரும் ஆதார் சேவையின் தேவையை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் வேலைக்கு செல்பவர்கள், பள்ளிக்கு செல்பவர்கள் அதிகம் பயன் அடைவர். முதியவர்கள், குழந்தைகள் அலைய வேண்டிய அவசியமில்லை. பல்வகை பயன்களை உள்ளடக்கிய இச்சிறப்பு ஏற்பாட்டை பெற மக்கள் தலைமை தபால் நிலையங்களை அணுகி பயன்பெறலாம், என்றார்.