/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ரோட்டை மறித்து அமைக்கப்படும் சிறுவர் பூங்காரோட்டை மறித்து அமைக்கப்படும் சிறுவர் பூங்கா
ரோட்டை மறித்து அமைக்கப்படும் சிறுவர் பூங்கா
ரோட்டை மறித்து அமைக்கப்படும் சிறுவர் பூங்கா
ரோட்டை மறித்து அமைக்கப்படும் சிறுவர் பூங்கா
ADDED : பிப் 06, 2024 12:06 AM

சிவகாசி : சிவகாசி மாநகராட்சி 26 வது வார்டு ஆயில் மில் காலனியில் குடியிருப்புகளுக்கு மத்தியில் ரோட்டை மறித்து அமைக்கப்படவுள்ள சிறுவர் பூங்காவிற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
சிவகாசி மாநகராட்சி 26வது வார்டு ஆயில் மில் காலனியில் குடியிருப்புகளுக்கு மத்தியில் மாநகராட்சிக்கு சொந்தமான இடம் உள்ளது.
இந்த இடத்தில் அப்பகுதியில் முக்கிய தெருக்களை இணைக்கும் ரோடு உள்ளது. இந்த ரோடு வழியாகத்தான் இப்பகுதி குடியிருப்புவாசிகள், இங்குஉள்ள நான்கு பள்ளிகளின்மாணவர்கள் சென்று வருகின்றனர்.
இந்நிலையில் மாநகராட்சி சார்பில் அங்கு குடியிருப்புகளுக்கு மத்தியில் பயன்பாட்டில் உள்ள ரோட்டை மறித்து சிறுவர் பூங்கா அமைப்பதற்கான பணிகள் துவங்கியுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள்வெளியேற வழியின்றி சிரமப்படுவதால் பூங்கா அமைக்க எதிர்ப்பு தெரிவித்தனர்.
அப்பகுதியினர் கூறுகையில், பல ஆண்டுகளாக இந்த ரோடு வழியாகத்தான் அரசு மருத்துவமனை, ரயில் நிலையம், பள்ளிகள் என பல்வேறு தேவைகளுக்கும் சென்று வருகின்றோம்.
இந்நிலையில் இங்கு சிறுவர் பூங்கா அமைக்கும்பணி துவங்கி உள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் வெளியே செல்வதற்கு வாய்ப்பே இல்லை. மேலும் அவசரத்திற்கு ஆம்புலன்ஸ் வருவதிலும் சிரமம் ஏற்படும். எனவே ரோட்டை விடுத்து சிறுவர் பூங்கா அமைக்க வேண்டும்.
இதே வார்டில் பூங்கா அமைப்பதற்கு என இடம் ஒதுக்கப்பட்டு பல ஆண்டுகளாக காலியிடம் இருந்தும்அங்கு பூங்கா அமைக்கவில்லை.