/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/சிவகாசியில் பூட்டிய வீட்டில் 30 பவுன், ரூ.20ஆயிரம் கொள்ளைசிவகாசியில் பூட்டிய வீட்டில் 30 பவுன், ரூ.20ஆயிரம் கொள்ளை
சிவகாசியில் பூட்டிய வீட்டில் 30 பவுன், ரூ.20ஆயிரம் கொள்ளை
சிவகாசியில் பூட்டிய வீட்டில் 30 பவுன், ரூ.20ஆயிரம் கொள்ளை
சிவகாசியில் பூட்டிய வீட்டில் 30 பவுன், ரூ.20ஆயிரம் கொள்ளை
ADDED : ஜன 25, 2024 01:34 AM

சிவகாசி:சிவகாசி பொதிகை நகரில் ஜெகநாதன் என்பவரின் வீட்டின் ஜன்னல் கம்பியை அறுத்து 30 பவுன் நகை, ரூ.20 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
சிவகாசி பொதிகை நகரை சேர்ந்தவர் ஜெகநாதன் 60, அச்சகம் நடத்தி வருகிறார். இவரது மனைவி கீதா. இரு மகன்களில் ஒருவர் வெளிநாட்டிலும், மற்றொருவர் வெளியூரிலும் வேலை பார்த்து வருகின்றனர். இரு நாட்களுக்கு முன் ஜெகநாதன் குடும்பத்துடன் திருப்பதிக்கு சென்றார். நேற்று காலை வீட்டிற்கு வந்து பார்த்த போது, பீரோ உடைக்கப்பட்டு உள்ளே இருந்த 30 பவுன் நகை, ரூ.20 ஆயிரம் பணம் கொள்ளை போனது தெரிந்தது. வீட்டில் ஆய்வு செய்த போது, வீட்டின் பின்பக்கம் இருந்த ஜன்னல் கம்பியை அறுத்து உள்ளே வந்த மர்ம நபர்கள் நகை, பணத்தை திருடி சென்றது தெரிய வந்தது. தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்தனர். டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.
தொடரும் திருட்டு
இரு வாரத்திற்கு முன்பு சிவகாசி பிருந்தாவன் நகரில் பூட்டிய வீட்டில் இரு மர்ம நபர்கள் திருட வந்தனர். உள்ளே பொருட்கள் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
ஒரு வாரத்திற்கு முன்பு சிவகாசி லட்சுமி நகரை சேர்ந்த ஓய்வு ராணுவ வீரர் எத்திராஜ் குடும்பத்துடன் திருவண்ணாமலை சென்றிருந்த போது, வீட்டிலிருந்த 58 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றனர். அடுத்த வாரமே இந்த சம்பவம் நடந்துள்ளது. பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு மர்ம நபர்கள் தொடர் திருட்டில் ஈடுபடுவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.