/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ தற்செயல் விடுப்பு போராட்டம் 1473 ஊழியர்கள் ஆப்சென்ட் தற்செயல் விடுப்பு போராட்டம் 1473 ஊழியர்கள் ஆப்சென்ட்
தற்செயல் விடுப்பு போராட்டம் 1473 ஊழியர்கள் ஆப்சென்ட்
தற்செயல் விடுப்பு போராட்டம் 1473 ஊழியர்கள் ஆப்சென்ட்
தற்செயல் விடுப்பு போராட்டம் 1473 ஊழியர்கள் ஆப்சென்ட்
ADDED : செப் 12, 2025 04:16 AM
விருதுநகர்: தி.மு.க., அரசின் தேர்தல் வாக்குறுதி படி பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி நேற்று விருதுநகர் மாவட்டத்தில் சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கம் சார்பில் தற்செயல் விடுப்பு போராட்டம் நடந்தது. இதில் 1473 பேர் ஆப்சென்ட் ஆகினர்.
மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரன் தலைமை வகித்தார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அந்தோணிராஜ் கோரிக்கையை விளக்கி பேசினார்.
மாநில ஆலோசகர் கண்ணன், ஊரக வளர்ச்சித்துறை மாவட்ட தலைவர் ராஜகோபால், வருவாய் கிராம உதவியாளர் சங்க பொதுச் செயலாளர் குரு நாகப்பன், அரசு ஊழியர் சங்க வைரவன், ஆதிதிராவிடர் நலத்துறை சுரேஷ் பாண்டியன் பேசினர்.
தற்செயல் விடுப்பு போராட்டத்தில் வளர்ச்சி துறை, கூட்டுறவு துறை, வருவாய்துறை, கிராம உதவியாளர், சுகாதார போக்குவரத்து பணிமனை, ஆதிதிராவிடர் நல துறை, உதவி பெறும் கல்லூரி அலுவலர் உட்பட பலர் பங்கேற்றனர்.