ADDED : செப் 12, 2025 04:16 AM
சாத்துார்: சாத்துார் மண்டல துணை தாசில்தார் நவநீதன் தலைமையில் வருவாய் துறை அலுவலர்கள் கரிசல்பட்டி அருகே சண்முகாபுரத்தில் அதே பகுதியைச் சேர்ந்த ஈஸ்வரன்.22. பாஸ்கரன், 19. சதீஷ்,23. பார்த்திபன், 34. ரஞ்சித் குமார், 32. அடையாளம் தெரியாத இருவர் ஆகியோர் மண் அள்ளும் எந்திரம் மூலம் 3 டிராக்டரில் ஓடையில் இருந்து அரசு அனுமதி இன்றி சரளை மண் அள்ளி கொண்டு இருந்தனர்.
அலு வலர்களை பார்த்ததும் தப்பி ஓடினர். பாஸ்கரன், 19 மட்டும் பிடிபட்டார். மண் அள்ளும் எந்திரம், சரளை மண் ஏற்றிய 3 டிராக்டர்களை போலீசில் ஒப்படைத்தனர். ஏழா யிரம் பண்ணை போலீசார் விசாரிக்கின்றனர்.