தேவை சுகாதார வளாகம்
ஜெயபிரகாஷ் குடியிருப்பாளர்: பசும்பொன் தெரு மேற்கு பகுதியில் சர்ச் பாதைதைக்கு செல்லும் காலி இடத்தை தான் மக்கள் திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனர். எனவே, ஆண், பெண் இருபாலருக்கும் நவீன சுகாதார வளாகம் கட்டித்தர வேண்டும்.
-வாறுகால்களை சரிசெய்ய வேண்டும்
-கோமதி, குடியிருப்பாளர்: பசும்பொன் நகரில தார் ரோடு உயரமாகவும், கழிவுநீர் வாறுகால்கள் தாழ்வாகவும் காணப்படுகிறது. கழிவுகள் தேங்கி சுகாதாரக் கேட்டை ஏற்படுத்துகிறது. எனவே வாறுகால்கள் உயர்த்தி கட்டவும், அடிக்கடி தூய்மை பணியை மேற்கொள்ள வேண்டும்.
பேரூராட்சியில் கோரிக்கை
-சுதா, துணைத் தலைவர்: மேல தெருவில் சுகாதார வளாகம் கட்டுதல், பசும்பொன் தெருவில் வாறுகால் கட்டுதல் கூடுதல் மின் விளக்குகள் அமைத்தல் தாமிரபரணி தண்ணீர் சப்ளை செய்தல் உட்பட பல்வேறு கோரிக்கைகளை பேரூராட்சியில் தெரிவித்துள்ளேன். இதில் பசும்பொன் தெரு நடுப்பட்டி தெருக்களில் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. மேல தெருவில் பேவர் பிளாக் ரோடு அமைக்கப்பட்டுள்ளது.
நடவடிக்கை எடுக்கப்படும்
-சுப்புலட்சுமி, பேரூராட்சி தலைவர்: நவீன சுகாதார வளாகம் கட்டவும், சேதமடைந்த வாறுகால்களை சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வார்டு உறுப்பினர் பொதுமக்கள் சுட்டிக்காட்டும் புகார்கள் சரி செய்யப்படும்.