ADDED : ஜூன் 18, 2024 06:50 AM
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை பீச் பர்பெக்ட் மைதானத்தில், உலக பாரம்பரிய சிலம்பாட்ட சம்மேளனம், பாரம்பரிய சிலம்பாட்ட கூட்டமைப்பு முதல் ஆயுதம் சிலம்பாட்ட பள்ளி சார்பாக, மாவட்ட அளவிலான சிலம்பாட்ட பயிற்சி முகாம் நடந்தது.
தலைமை ஆசான் கண்ணன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் மணிகண்டன், தென்காசி மாவட்ட செயலாளர் ராசு பயிற்சி அளித்தனர்.
முகாமில் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த பல்வேறு ஊர்களில் இருந்து 80க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கு கொண்டனர். இவர்களுக்கு பல்வேறு விதமான பயிற்சிகள், சிலம்ப நுணுக்கங்கள் கற்றுத்தரப்பட்டது.
ஏற்பாடுகளை மாவட்டதலைவர் அபி, மணி செயலாளர் பொன்னுச்சாமி ராஜா செய்தனர்.