/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ புதர் மண்டி கிடக்கும் நரிக்குடி ஒன்றிய வளாகம் புதர் மண்டி கிடக்கும் நரிக்குடி ஒன்றிய வளாகம்
புதர் மண்டி கிடக்கும் நரிக்குடி ஒன்றிய வளாகம்
புதர் மண்டி கிடக்கும் நரிக்குடி ஒன்றிய வளாகம்
புதர் மண்டி கிடக்கும் நரிக்குடி ஒன்றிய வளாகம்
ADDED : ஜூன் 18, 2024 06:54 AM
நரிக்குடி : நரிக்குடி ஒன்றிய அலுவலக வளாகத்தில் சீமைக் கருவேல மரங்கள்அடர்ந்து புதர் மண்டி கிடப்பதால் விஷ பூச்சிகள்நடமாட்டத்தால் மக்களும், ஊழியர்களும் அச்சத்தில் உள்ளனர்.
நரிக்குடி ஒன்றிய அலுவலக கட்டடங்கள் சேதமடைந்ததையடுத்து புதிய அலுவலக கட்டடம் கட்டப்பட்டு செயல்பட்டு வருகிறது. பழைய கட்டடம் உள்ள பகுதிகளில் சீமைக் கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்து புதர் மண்டி கிடக்கிறது. செடிகளுக்குள் விஷ பூச்சிகள் தங்கி இனவிருத்தி அடைந்து வருகின்றன. புதிய அலுவலக கட்டடம் பகுதிகளுக்குள் விஷப்பூச்சிகள் நடமாட்டம் இருப்பதால் அங்கு பணியாற்ற கூடிய அதிகாரிகள் பணி நிமித்தமாக வரும் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
புதர் மண்டி கிடக்கும் சீமைக்கருவேல மரங்களைஅப்புறப்படுத்தி, அங்கு பூங்கா அமைக்க லாம். பழைய கட்டடங் களை மராமத்து செய்து வேறு பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டு மென மக்கள் விரும்புகின்றனர்.