/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ ரோட்டோரம் வீணாகும் குடிநீர் தண்ணீர் தேங்குவதால் தொற்று ரோட்டோரம் வீணாகும் குடிநீர் தண்ணீர் தேங்குவதால் தொற்று
ரோட்டோரம் வீணாகும் குடிநீர் தண்ணீர் தேங்குவதால் தொற்று
ரோட்டோரம் வீணாகும் குடிநீர் தண்ணீர் தேங்குவதால் தொற்று
ரோட்டோரம் வீணாகும் குடிநீர் தண்ணீர் தேங்குவதால் தொற்று
ADDED : ஜூன் 18, 2024 06:50 AM

விருதுநகர்: விருதுநகர் சிவகாசி ரோட்டில் ஆத்துப்பாலம் பகுதியில் குடிநீர் குழாயிலிருந்து நீர் கசிந்து ரோட்டோரம் பல நாட்களாக தேங்கி நிற்பதால் பாசி படர்ந்து தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளது.
விருதுநகர் சிவகாசி ரோட்டில் ஆத்துப்பாலம் கடந்து வரும் பகுதியில் குடிநீர் குழாயில் கசிவு ஏற்பட்டு ரோட்டோரம் நீர் தேங்கி உள்ளது. நீண்ட நாட்களாக இந்த நீர் தேங்கி மெல்ல மெல்ல கருமை நிறமாக மாறி பாசி டர்ந்து வருகிறது.
இந்நிலையில் இது நன்னீராக இருப்பதால் டெங்கு பரவும் அபாயம் உள்ளது. இதன் மூலம் பாதிப்பும் ஏற்படும்.
உள்ளாட்சி அமைப்புகள் குடிநீர் குழாயில் கசியாதவாது இருக்க வட்டார வளர்ச்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.