ADDED : ஜூலை 14, 2024 04:21 AM
ஸ்ரீவில்லிபுத்துார், : ஸ்ரீவில்லிபுத்துார் அருகே மனவளர்ச்சி குன்றிய மகளுக்கு மருத்துவ செலவு செய்ததால் கடன் சுமை ஏற்பட்டதால் மன வேதனை அடைந்த தந்தை பாலகிருஷ்ணன் தனது குலதெய்வ கோயிலில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
ஸ்ரீவில்லிபுத்துார் சொக்கலாம் பட்டியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் 34, பாஸ்ட் புட் கடை நடத்தி வந்தார். இவரது மூத்த மகள் மனவளர்ச்சி குன்றி மருத்துவ செலவு செய்ததால் வருமானத்தை விட கடன் சுமை ஏற்பட்டது. இதனால் மிகுந்த மனவேதனையில் இருந்த பாலகிருஷ்ணன், ஜூலை 11 முதல் வீட்டிற்கு வராமல் இருந்த நிலையில் நேற்று காலை அவரது குலதெய்வ கோயிலான திருவண்ணாமலை சின்னகம்மாள் கோயிலில் விஷம் குடித்து தற்கொலை செய்து இறந்து கிடந்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்துார் டவுன் போலீசார் விசாரித்தனர்.