ADDED : ஜூலை 14, 2024 04:21 AM
புகையிலை பறிமுதல்: இருவர் கைது
சாத்துார்: சாத்துார் சடையம்பட்டியில் பெட்டிக்கடை நடத்தி வரும் ராசையா 43. புகையிலை பாக்கெட் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசார் சோதனை செய்தபோது 12 புகையிலை பாக்கெட்டுகள் அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டன. தாலுகா போலீசார் அவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.
* வெம்பக்கோட்டை அம்மையார்பட்டியை சேர்ந்தவர் முருகன் 54. இவரது பெட்டிக்கடையில் புகையிலை பான் மசாலா விற்பனை செய்தார். போலீசார் அவரது கடையிலிருந்து புகையிலை பான் மசாலா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து அவரை கைது போலீசார் விசாரிக்கின்றனர்.
பணம் பறிக்க முயற்சி
சிவகாசி: திருமேனி நகரைச் சேர்ந்தவர் சுந்தரமகாலிங்கம் 26. இவர் நாரணாபுரம் ஒத்தக்கடை அருகே வரும்போது திருத்தங்கல் திருவள்ளுவர் காலனியைச் சேர்ந்த பெரியசாமி 26, வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்றார். அவரை கிழக்கு போலீசார் கைது செய்தனர்.
தற்கொலை
சிவகாசி: அம்மாபட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் தங்கவேல் 65. ஒன்றரை வருடமாக மனநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இவர் அரளி விதையை அரைத்து குடித்து விட்டார். சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பியவர், வீட்டில் இறந்தார். மாரனேரி போலீசார் விசாரிக்கின்றனர்.
தடை புகையிலை: ஒருவர் கைது
விருதுநகர்: முதலிப்பட்டியைச் சேர்ந்தவர் மகேந்திரன் 42. இவர் ஓட்டலில் வைத்து தடை புகையிலை 120 கிராம் விற்பனை செய்ய பதுக்கி வைத்திருந்ததை வச்சக்காரப்பட்டி எஸ்.ஐ., சதீஸ்குமார் கண்டறிந்து பறிமுதல் செய்து கைது செய்தார்.