/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ பஸ் படிக்கட்டில் தொங்கும் மாணவர்கள் தேவை விழிப்புணர்வு பஸ் படிக்கட்டில் தொங்கும் மாணவர்கள் தேவை விழிப்புணர்வு
பஸ் படிக்கட்டில் தொங்கும் மாணவர்கள் தேவை விழிப்புணர்வு
பஸ் படிக்கட்டில் தொங்கும் மாணவர்கள் தேவை விழிப்புணர்வு
பஸ் படிக்கட்டில் தொங்கும் மாணவர்கள் தேவை விழிப்புணர்வு
ADDED : ஜூலை 11, 2024 04:51 AM

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பஸ் படிக்கட்டில் தொங்கி செல்வது தொடர்கதையாக உள்ளதற்கு விழிப்புணர்வு தேவையாக உள்ளது.
அருப்புக்கோட்டையில் உள்ள கல்லூரிகளில் படிக்க சுற்றியுள்ள கிராம பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் படிக்க வருகின்றனர். அருப்புக்கோட்டையில் இருந்து ஏராளமான மாணவர்கள் வெளியூருக்கு படிக்க செல்கின்றனர். இவர்கள் கல்லூரி பஸ்களில் சென்றாலும் பெரும்பாலான மாணவர்கள் அரசு, தனியார் பஸ்களில் தான் செல்கின்றனர்.
பள்ளி கல்லூரி நேரங்களில் போதுமான பஸ் வசதிகள் இல்லாததால் மாணவர்கள் படிக்கட்டில் தொங்கி செல்கின்றனர்.
இன்னும் சிலர் பஸ் உள்ளே இடம் இருந்தாலும், பஸ் படிக்கட்டில் தொங்கி செல்வதை விரும்புகின்றனர். போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை செய்தாலும் பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தினாலும் மாணவர்கள் கண்டு கொள்வதில்லை.
இருப்பினும் போதிய நடவடிக்கை எடுத்து மாணவர்கள் பஸ் படிக்கட்டில் தொங்கி செல்வதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.