/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ மழைநீர் வரத்து ஓடையில் குப்பை கொட்டி எரிப்பு மழைநீர் வரத்து ஓடையில் குப்பை கொட்டி எரிப்பு
மழைநீர் வரத்து ஓடையில் குப்பை கொட்டி எரிப்பு
மழைநீர் வரத்து ஓடையில் குப்பை கொட்டி எரிப்பு
மழைநீர் வரத்து ஓடையில் குப்பை கொட்டி எரிப்பு
ADDED : ஜூலை 11, 2024 04:50 AM

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே பெரிய புளியம்பட்டி உச்சினி மாகாளி அம்மன் கோவில் பின்புறம் உள்ள மழை நீர்வரத்து ஓடையில் குப்பைகளை கொட்டி எரிக்கின்றனர்.
கோயில் பின்புறம் பெரிய கண்மாய்க்கு செல்லும் மழை நீர் வரத்து ஓடை உள்ளது. இந்த ஓடையில் குப்பை, கட்டட கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்றன. ஓடையும் ஆக்கிரமிப்பால் சுருங்கி வருகிறது. குப்பை கழிவுகளில் தீ வைத்து எரிக்கின்றனர்.
இதனால் அந்த பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதியில் புகை சூழ்ந்து சுவாசக் கோளாறு ஏற்படுகிறது. மழை நீர் வரத்து ஓடையில் கழிவுகளை கொட்டுவதால் மழைக்காலங்களில் மழைநீர் வெளியேற முடியாமல் தெருக்களில் தண்ணீர் தேங்கி விடுகிறது. நீர் வழி தடங்களில் மழை நீர் செல்ல முடியாமல் இருப்பதால் விவசாயிகள் சிரமப்படுகின்றனர்.
அருப்புக்கோட்டையில் பல பகுதிகளில் நீர்வழி தடங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன. இவற்றை அனைத்தையும் தூர்வாரி மழைநீர் செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.