/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ காலை நேரங்களில் தேங்கும் பாதாள சாக்கடை கழிவுநீர் காலை நேரங்களில் தேங்கும் பாதாள சாக்கடை கழிவுநீர்
காலை நேரங்களில் தேங்கும் பாதாள சாக்கடை கழிவுநீர்
காலை நேரங்களில் தேங்கும் பாதாள சாக்கடை கழிவுநீர்
காலை நேரங்களில் தேங்கும் பாதாள சாக்கடை கழிவுநீர்
ADDED : ஜூலை 11, 2024 04:49 AM

விருதுநகர்: விருதுநகர் நகராட்சி ம.கு.அய்யன் தெருவில் காலை நேரங்களில் தேங்கும் பாதாளசாக்கடை கழிவுநீரால் அப்பகுதி மக்கள் கடும் சிரமத்தை சந்திக்கின்றனர்.
விருதுநகர் நகராட்சி 28வது வார்டில் உள்ள ம.கு.அய்யன் தெருவில் கிழக்கு பக்கம் கடைசியில் உள்ள பாதாளசாக்கடை தொட்டி நிறைந்து கழிவுநீர் கடந்த 2 மாத காலமாக தெருவில் ஓடிக் கொண்டிருக்கிறது. நகராட்சி பதிவேட்டில் புகார் எழுதி வைத்தும் யாரும் வந்து பார்க்கவில்லை என அப்பகுதி மக்கள் புலம்புகின்னறர்.
தினசரி காலை நேரங்களில் இந்த கழிவுநீர் ஓடுவதால் மிகப்பெரிய சுகாதாரக்கேடு நிலவுகிறது. நோய் பரவும் அபாயமும் உள்ளது. நகராட்சி நிர்வாகம் தலையிட்டு காலை நேரங்களில் மட்டும் வெளியேறும் கழிவுநீரை கட்டுப்படுத்த வேண்டும். அடைப்பு ஏற்பட்டுள்ள இடங்களை கண்டறிந்து அதை சரி செய்து சீராக கழிவுநீர் வெளியேற வழிவகை செய்ய வேண்டும்.