/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ கூமாபட்டியில் அண்ணனை குத்திக்கொலை செய்த தம்பி கூமாபட்டியில் அண்ணனை குத்திக்கொலை செய்த தம்பி
கூமாபட்டியில் அண்ணனை குத்திக்கொலை செய்த தம்பி
கூமாபட்டியில் அண்ணனை குத்திக்கொலை செய்த தம்பி
கூமாபட்டியில் அண்ணனை குத்திக்கொலை செய்த தம்பி
ADDED : ஜூலை 11, 2024 08:07 PM

வத்திராயிருப்பு:விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு தாலுகா கூமாபட்டி ராமசாமியாபுரத்தில் சொத்து , வாத்துக்கள் மேய்ப்பதில் ஏற்பட்ட முன் விரோதத்தில் வீரகுருவை 21, பெரியப்பா மகன் வீரபாண்டி 20, கம்பால் அடித்து கத்தியால் குத்திக் கொலை செய்தார்.
கூமாபட்டி ராமசாமியாபுரத்தை சேர்ந்த வீரகுரு, வீரபாண்டி வாத்து மேய்க்கும் தொழில் செய்து வந்தனர். இரு குடும்பத்திற்கும் இடையே சொத்து, வாத்துகள் மேய்ப்பது தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்தது.
நேற்று காலை 10:00 மணிக்கு வீரகுருவை, வீரபாண்டியும் அவரது உறவினர் முனியசாமியும் திட்டி கம்பால் அடித்து, கத்தியால் குத்திக்கொலை செய்தனர். இதில் வீரபாண்டிக்கு கையில் காயம் ஏற்பட்டு மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முனியசாமியை கூமாபட்டி போலீசார் தேடி வருகின்றனர்.