ADDED : ஜூன் 20, 2024 04:15 AM

சாத்துார்: சாத்துார் மேட்ட மலை கிருஷ்ணசாமி கலை ,அறிவியல் கல்லுாரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கான வரவேற்பு விழா நடந்தது.
கல்லுாரி தலைவர் ராஜீ தலைமை வகித்தார். செயலாளர் முத்துக்குமார் முன்னிலை வகித்தார். மாணவி காவியா வரவேற்றார். முதல்வர் உஷா தேவி வாழ்த்தினார்.
தமிழ்நாடு முன்னாள் காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு மாணவர்களிடம் விளையாட்டின் முக்கியத்துவம், சமூகத்தில் தன்னம்பிக்கையுடன் முன்னேறுவதற்கான வழிமுறைகள் குறித்து பேசினார். மாணவி ஆர்த்தி நன்றி கூறினார். விழாவில் முதலாம் ஆண்டு மாணவர்கள் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.