Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ சிவகாசி சாட்சியாபுரம் ரயில்வே மேம்பால பணி ஜூலை 23ல் துவக்கம் ரயில்வே கிராசிங் வழியாக டூவீலர்களுக்கு அனுமதி

சிவகாசி சாட்சியாபுரம் ரயில்வே மேம்பால பணி ஜூலை 23ல் துவக்கம் ரயில்வே கிராசிங் வழியாக டூவீலர்களுக்கு அனுமதி

சிவகாசி சாட்சியாபுரம் ரயில்வே மேம்பால பணி ஜூலை 23ல் துவக்கம் ரயில்வே கிராசிங் வழியாக டூவீலர்களுக்கு அனுமதி

சிவகாசி சாட்சியாபுரம் ரயில்வே மேம்பால பணி ஜூலை 23ல் துவக்கம் ரயில்வே கிராசிங் வழியாக டூவீலர்களுக்கு அனுமதி

ADDED : ஜூலை 21, 2024 04:12 AM


Google News
சிவகாசி: சிவகாசி சாட்சியாபுரம் ரயில்வே மேம்பால பணிகள் ஜூலை 23ல் துவங்க உள்ளது. இதனால் சோதனை அடிப்படையில் நேற்று முன் தினமும், நேற்றும், அடைக்கப்பட்ட ரயில்வே கிராசிங் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழியாக டூ வீலர்கள் மட்டும் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சிவகாசி - ஸ்ரீவில்லிபுத்துார் ரோட்டில் சாட்சியாபுரம் ரயில்வே கிராசிங்கில் இரட்டைப் பாலம் முதல் சட்சியாபுரம் பஸ் ஸ்டாப் வரை 12மீ அகலத்தில் 700மீ நீளத்திற்கு மேம்பாலம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டு, நிதி ஒதுக்கீடு செய்து டெண்டர் வெளியிடப்பட்டது.

மேம்பாலம் பணிகள் நடக்கும் போது கனரக வாகனங்கள், பஸ்கள், இலகுரக வாகனங்கள், டூவீலர்கள் செல்வதற்காக தனித்தனியாக மாற்றுப்பாதை தேர்வு செய்யப்பட்டது.

ரயில்வே கிராசிங் மூடப்பட்டு நேற்று முன்தினமும் நேற்றும், சோதனை முறையில் மாற்றுப்பாதையில் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது.

நேற்று முன்தினம் அனைத்து வாகனங்களும் ஒரே மாற்றுப்பாதையில் வந்ததால் நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.

இந்நிலையில் நேற்று ரயில்வே கிராசிங் மற்றும் மாற்றுப் பாதையில் ஆய்வு செய்த அசோகன் எம்.எல்.ஏ., டூவீலர்கள் மட்டும் ரயில்வே கிராசிங் வழியாக கடந்து செல்ல அனுமதி அளிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

இதையடுத்து டூவீலர்கள் வழக்கம் போல் ரயில்வே கிராசிங்கை கடந்து செல்ல அனுமதிக்கப்பட்டது.

இதுகுறித்து எம்.எல்.ஏ., கூறுகையில், மாற்றுப் பாதையில் வாகனங்களை இயக்குவதில் ஏற்படும் சிக்கல்கள் குறித்து ஆய்வு செய்வதற்காகவே இரு நாட்கள் ரயில்வே கிராசிங் மூடப்பட்டு மாற்றுப்பாதையில் அனைத்து வாகனங்களும் திருப்பிவிடப்பட்டது.

ஜூலை 23 ல் மேம்பால கட்டுமான பணிகளை அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன் ஆகியோர் துவக்கி வைக்க உள்ளனர். இதனால் சாட்சியாபுரம் ரயில்வே கிராசிங் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும்.

மக்களின் கோரிக்கையை ஏற்று டூவீலர்கள் மட்டும் ரயில்வே கிராசிங்கை வழக்கம் போல் கடந்து செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வழியே பள்ளி மாணவர்களை ஏற்றிச் செல்லும் ஆட்டோக்களை அனுமதிப்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசிக்கப்பட்டு வருகிறது, என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us