ADDED : ஜூலை 21, 2024 04:12 AM
ஸ்ரீவில்லிபுத்துார்: தென்காசி மாவட்டம் கோவிலாண்டனூரை சேர்ந்தவர் ஞான செல்வம் 30, இவர் மூணாறில் வேலை செய்து வந்துள்ளார்.
இவர் நேற்று அதிகாலை தனது சொந்த ஊரிலிருந்து டூவீலரில் அதிகாலை 5:40 மணிக்கு கிருஷ்ணன்கோவில் கண் மருத்துவமனை அருகில் வரும்போது எதிரில் மதுரையில் இருந்து தென்காசிக்கு காய்கறி ஏற்றிச் சென்ற வேன் மோதியதில் பலியானார். வேன் டிரைவர் புளியங்குடியை சேர்ந்த பழனி முருகன்,39, என்பவரை கிருஷ்ணன் கோவில் போலீசார் கைது செய்தனர்.