ADDED : ஜூலை 21, 2024 04:11 AM
விருதுநகர்: கலெக்டர் ஜெயசீலன் செய்திக்குறிப்பு:
விருதுநகர் மாவட்டத்தில் விசுவல் கம்யூனிகேசன், கிரியேடிவ் சிந்தனை துறைகளில் ஆர்வம் கொண்ட பள்ளி, கல்லுாரி மாணவர்கள் 100 பேருடன் கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் பரிதாபங்கள் யுடியூப் சேனல் கோபி, சுதாகர் பங்கேற்ற 83 வது காபி வித் கலெக்டர் நிகழ்ச்சி நடந்தது.
இத்துறையில் உள்ள வாய்ப்புகள், படிப்புகள், தொழில்நுட்பங்கள், திறமைகளை வளர்த்து கொள்ளுவது குறித்த மாணவர்களின் சந்தேகங்களுக்கு அவர்கள் பதிலளித்தனர். மேலும் திறமையை வளர்த்துக்கொண்டு வாய்ப்புகளை பயன்படுத்தி பிரபலமான தங்களின் அனுபவங்களையும் மாணவர்களிடம் பகிர்ந்து கொண்டனர்.
முன்னதாக கோபி, சுதாகருக்கு கலெக்டர் ஜெயசீலன் 'விரு' என்ற சாம்பல் நிற அணிலின் உருவமைப்பிலான நினைவு பரிசனை வழங்கினார்.