ADDED : ஜூலை 21, 2024 04:13 AM
வீடியோ எடுத்து மிரட்டிய வாலிபர்: தற்கொலைக்கு முயன்ற பெண்
சிவகாசி நாரணாபுரம் ரோடு பர்மா காலனியை சேர்ந்தவர் பாண்டியன் மனைவி மகேஸ்வரி 27. இவரது வீட்டின் அருகில் குடியிருக்கும் மாடசாமி, ஒன்பது மாத காலமாக மகேஸ்வரி குளிக்கும் வீடியோ வைத்திருப்பதாக கூறி தனது அலைபேசி எண்ணை கொடுத்து மகேஸ்வரி பேச வேண்டும் என மிரட்டி வந்துள்ளார். இதனால் இருவரும் தனியாக சந்தித்துள்ளனர். இந்நிலையில் மாடசாமி மீண்டும் மகேஸ்வரியிடம் நீ நாளை என் வீட்டிற்கு வரவேண்டும் என மிரட்டினார். இதனால் மகேஸ்வரி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.
---பட்டாசு பறிமுதல்: இருவர் கைது
சிவகாசி திருத்தங்கல் முத்தையா நாடார் சந்து பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் 38, சித்தமநாயக்கன்பட்டியை சேர்ந்த சக்திவேல் 38, ஆகியோர் அனுமதி இன்றி லோடு வேனில் பட்டாசுகளை ஏற்றி வந்தனர். இருவரையும் திருத்தங்கல் போலீசார் கைது செய்து ரூ. 30 ஆயிரம் மதிப்பிலான பட்டாசுகள், லோடு வேனை பறிமுதல் செய்தனர்.-----
பெண் மீது தாக்குதல்
சிவகாசி கோபால் நகரை சேர்ந்தவர் லட்சுமி 50. குழாய் கம்பெனியில் வேலை பார்க்கும் இவரை உடன் வேலை பார்க்கும் முத்துராமலிங்க நகரைச் சேர்ந்த ஜெய குருவு தகாத வார்த்தை பேசி அடித்தார். திருத்தங்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.
---பட்டாசு பறிமுதல்
சிவகாசி புலிப்பாறை பட்டியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவர் தனக்கு சொந்தமாக உள்ள பகவான் பேக்கேஜில் அரசு அனுமதி உரிமம் இன்றி வேலையாட்களை வைத்து சரவெடிகள் தயாரித்தார். மாரனேரி போலீசார் வழக்கு பதிவு செய்து பட்டாசுகளை பறிமுதல் செய்தனர். ராதாகிருஷ்ணனை தேடுகின்றனர்.
----நர்சிங் மாணவி மாயம்
சிவகாசி சூர நாயக்கன்பட்டி கருப்பசாமி காலனியைச் சேர்ந்தவர் மாரியம்மாள் மகள் மீனாட்சி 19. அருப்புக்கோட்டையில் உள்ள நர்சிங் கல்லுாரியில் படித்து வரும் இவர் சில நாட்களாக போடு ரெட்டி பெட்டியை சேர்ந்த ஒரு பையனுடன் அடிக்கடி அலைபேசியில் பேசி வந்தார். இதனை அவரது தாயார் கண்டித்தார். இந்நிலையில் கல்லுாரிக்கு போவதாக கூறிச் சென்ற மீனாட்சி மீண்டும் வீடு திரும்பவில்லை. டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.
---தாய் மகனுடன் மாயம்
சிவகாசி திருத்தங்கல் ஸ்டாண்டர்டு காலனியை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி பொன்னு லட்சுமி 30. இவர்களுக்கு 15, 11 வயதில் இரு மகன்கள் உள்ளனர். ரமேஷ் மது அருந்தி விட்டு வாக்குவாதம் செய்ததால், பொண்ணு லட்சுமி தனது 11 வயது மகனுடன் வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் திரும்பவில்லை. திருத்தங்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.
கோயிலில் திருட முயற்சி
சாத்துார்: ஆலங்குளம் ஏ.லட்சுமியாபுரம் அணைத்தலையாண்டி கோயிலில் ஜூலை 13 இரவு கோயில் கதவை உடைத்து உள்ளே புகுந்த நபர் கோயிலில் உள்ள உண்டியலையும் நகைகளையும் திருட முயற்சி செய்துள்ளார். ஆலங்குளம் போலீசார் விசாரிக்கின்றனர்.
சிறுமி மாயம்
சாத்துார் சின்னகாமன் பட்டியை சேர்ந்தவர் முருகேஸ்வரி, 37. இவரது 15 வயது மகள் ஜூலை 17 இரவு வீட்டை விட்டு வெளியே சென்றவர் மாயமானார். சாத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.