Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ சிவகாசி காசி விஸ்வநாதர் கோயில் வைகாசி திருவிழா கொடியேற்றம்

சிவகாசி காசி விஸ்வநாதர் கோயில் வைகாசி திருவிழா கொடியேற்றம்

சிவகாசி காசி விஸ்வநாதர் கோயில் வைகாசி திருவிழா கொடியேற்றம்

சிவகாசி காசி விஸ்வநாதர் கோயில் வைகாசி திருவிழா கொடியேற்றம்

ADDED : ஜூன் 07, 2024 04:44 AM


Google News
Latest Tamil News
சிவகாசி: சிவகாசி காசி விஸ்வநாதர் கோயிலில் வைகாசி பிரம்மோற்ஸவ திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

சிவகாசி காசி விஸ்வநாதர் கோயில் பிரமோற் ஸவ விழா நேற்று காலை 10:30 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக காசி விஸ்வநாதர், விசாலாட்சி அம்மன் அலங்காரத்தில் ஊஞ்சலில் எழுந்தருளினர். 11 நாட்கள் தொடர்ந்து நடைபெறும் பிரம்மோற்ஸவ விழாவில் தினசரி அம்மன், சுவாமி பல்வேறு வாகனங்களில்வீதி உலா வருவர்.

ஜூன் 12 ல் இரவு 8:00 மணிக்கு தபசுக் காட்சியும், அதிகாலை 12:00 மணிக்கு விஸ்வநாதர் விசாலாட்சி அம்மன் திருக்கல்யாணமும் நடைபெறும். ஜூன் 14 ல் காலை தேரோட்டம் நடைபெற உள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us