ADDED : ஜூன் 07, 2024 04:45 AM
விருதுநகர்: விருதுநகர் காமராஜ் பொறியியல் தொழில்நுட்ப கல்லுாரியில் மாவட்ட சிலம்பாட்ட கழகம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட சிலம்ப போட்டி நடந்தது.
தேனி, திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். வெற்றி மாணவர்களுக்கு பரிசு, சான்றுகள் வழங்கப்பட்டன. சிலம்பாட்ட கழக தலைவர் ஜாகிர் ஹூசைன் தலைமை வகித்தார். செயலாளர் ஹரிபாஸ்கர் முன்னிலை வகித்தார். கல்லுாரி செயலாளர் தர்மராஜன் சிலம்ப போட்டிகளை துவக்கி வைத்தார். துணை தலைவர் பாலகிருஷ்ணன், துணை செயலாளர் முருகன், பொருளாளர் ஸ்ரீமுருகன், கல்லுாரி முதல்வர் செந்தில், உடற்கல்வி இயக்குனர் புஷ்பராஜ் பங்கேற்றனர்.