ADDED : ஜூன் 07, 2024 04:43 AM
விருதுநகர்: முதுநிலை கோட்ட கண்காணிப்பாளர் சுசீலா செய்திக்குறிப்பு: கோட்ட அளவிலான தபால் சேவை குறைதீர்க்கும் முகாம் ஜூன் 21 மாலை 3:00 மணிக்கு விருதுநகரில் உள்ள முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடக்கிறது. புகார் மனுக்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் ஜூன் 15. தபால் சம்மந்தப்பட்ட புகாரில் அனுப்பப்பட்ட தேதி, நேரம், அனுப்பியவர், பெறுபவரின் முகவரி, ரசீது எண், மணியார்டர், துரித தபால், பதிவு தபால் ஆகியவற்றுக்கான விவரங்களை குறிப்பிட்டிருக்க வேண்டும். புகார் சேமிப்பு வங்கி, அஞ்சல் காப்பீடு, கிராமிய அஞ்சல் சம்மந்தமாக இருப்பின் கணக்கு எண், கணக்கு வைத்திருப்பவரின் பெயர் முகவரி, பணம் செலுத்திய முழுவிவரம், பணம் செலுத்திய அலுவலகத்தின் பெயர் அஞ்சல் துறை சம்மந்தப்பட்ட கடித தொடர்புகள் ஏதேனும் இருப்பின் அதையும் புகாருடன் இணைக்க வேண்டும்.
க்ஷதபால் உறையின் மீது முன்பக்க மேல் பகுதியில் 'தபால் சேவை குதைீர்க்கும் முகாம் ஜூன் 2024' என தெளிவாக குறிப்பிட்டு அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலக முகவரிக்கு அனுப்ப வேண்டும், என்றார்.