/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ போலீஸ் ஸ்டேஷன் அருகில் கழிவுநீர் தொற்றுநோய் பாதிப்பில் மக்கள் போலீஸ் ஸ்டேஷன் அருகில் கழிவுநீர் தொற்றுநோய் பாதிப்பில் மக்கள்
போலீஸ் ஸ்டேஷன் அருகில் கழிவுநீர் தொற்றுநோய் பாதிப்பில் மக்கள்
போலீஸ் ஸ்டேஷன் அருகில் கழிவுநீர் தொற்றுநோய் பாதிப்பில் மக்கள்
போலீஸ் ஸ்டேஷன் அருகில் கழிவுநீர் தொற்றுநோய் பாதிப்பில் மக்கள்
ADDED : ஜூன் 07, 2024 04:43 AM

சிவகாசி: திருத்தங்கல் போலீஸ் ஸ்டேஷன் அருகே தேங்கியுள்ள கழிவு நீரால் மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். மேலும் தொற்று நோயினால் பாதிக்கப்படுகின்றனர்.
க்ஷதிருத்தங்கல் போலீஸ் ஸ்டேஷன் அருகே வெள்ளையாபுரம் செல்லும் ரோட்டில் செங்குளம் கண்மாய் எதிரே பெரிய கிடங்கு உள்ளது. இப்பகுதியில் வாறுகால் இல்லாததால் பாண்டியன் நகரின் மொத்தக் கழிவுகளும் இங்கு வந்து தேங்குகிறது. இந்த தண்ணீர் தற்போது பாசிப்படர்ந்து சாக்கடையாக மாறி துர்நாற்றத்தை ஏற்படுத்துகிறது. இதில் பிளாஸ்டிக் கழிவுகளும் கொட்டப்பட்டுள்ளது. மேலும் அருகிலேயே மாநகராட்சி மண்டல அலுவலகமும் செயல்படுகின்றது. போலீஸ் ஸ்டேஷன், மண்டல அலுவலகத்திற்கு வரும் மக்கள் துர்நாற்றத்தினால் பெரிதும் அவதிப்படுகின்றனர். மேலும் சுகாதாரக் கேடும் ஏற்படுகிறது.
தவிர இதனை கடந்து செல்லும் வாகன ஓட்டிகளும் சிரமப்படுகின்றனர். எனவே இங்கு கழிவு நீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதியினர் எதிர்பார்க்கின்றனர்.