/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ இரு வாரமாக பட்டாசு ஆலைகள் ஸ்டிரைக்: தொழிலாளர்கள் வேலையின்றி தவிப்பு இரு வாரமாக பட்டாசு ஆலைகள் ஸ்டிரைக்: தொழிலாளர்கள் வேலையின்றி தவிப்பு
இரு வாரமாக பட்டாசு ஆலைகள் ஸ்டிரைக்: தொழிலாளர்கள் வேலையின்றி தவிப்பு
இரு வாரமாக பட்டாசு ஆலைகள் ஸ்டிரைக்: தொழிலாளர்கள் வேலையின்றி தவிப்பு
இரு வாரமாக பட்டாசு ஆலைகள் ஸ்டிரைக்: தொழிலாளர்கள் வேலையின்றி தவிப்பு
ADDED : ஜூன் 07, 2024 04:42 AM
சிவகாசி: சிவகாசி அருகே வெம்பக்கோட்டை பகுதியில் பட்டாசு ஆலைகளில் நடத்தப்படும் ஆய்வை கண்டித்து டாப்மா சங்கத்தினர் இரு வாரமாக ஆலைகளை மூடி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் ரூ.28 கோடி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலை வாய்ப்பு இன்றி தவித்து வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் தலையிட்டு சுமூக முடிவு எடுக்க வேண்டும் என தொழிலாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
சிவகாசி பகுதியில் சரவெடி உற்பத்தி செய்யும் சிறு பட்டாசு ஆலைகளில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதை கண்டித்து தமிழன் பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்கம் (டாப்மா) சார்பில் மே 24 முதல் பட்டாசு ஆலைகளை மூடி காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக மே 27ல் இச்சங்கத்தினர் கலெக்டரிடம் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது. தவிர டாப்மா சங்கம் சார்பில் சிவகாசியில் உள்ள மற்ற பட்டாசு ஆலை உரிமையாளர்கள் சங்கங்களான டான்பாமா, டிப்மா, சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் உள்ளிட்ட சங்கங்களிடம் ஆதரவு கேட்டுள்ளனர்.
இந்நிலையில் இன்று வரை 14 நாட்கள் பட்டாசு ஆலைகள் மூடப்பட்டுள்ளதால் இதுவரையிலும் ரூ.28 கோடி வரை பட்டாசு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் அப்பகுதியைச் சேர்ந்த பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு இன்றி வாழ்வாதாரத்துக்கு சிரமப்பட்டு வருகின்றனர். தொடர்ந்து பட்டாசு ஆலைகள் இயங்காமல் இதே நிலை நீடித்தால் தொழிலாளர்கள் பெரிதும் சிரமப்படுவர்.
பட்டாசு உற்பத்தியும் பாதிக்கப்படுவதால் பற்றாக்குறை ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் இதில் தலையிட்டு சுமூக பேச்சுவார்த்தை நடத்தி பட்டாசு ஆலைகளை திறப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தொழிலாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.