/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ கடத்தல் ரேஷன் அரிசி காருடன் பறிமுதல் கடத்தல் ரேஷன் அரிசி காருடன் பறிமுதல்
கடத்தல் ரேஷன் அரிசி காருடன் பறிமுதல்
கடத்தல் ரேஷன் அரிசி காருடன் பறிமுதல்
கடத்தல் ரேஷன் அரிசி காருடன் பறிமுதல்
ADDED : ஜூலை 10, 2024 06:54 AM

சிவகாசி, : வெம்பக்கோட்டை ஒன்றியம் விஜய கரிசல்குளத்தில் வீடுகளில் மக்களிடமிருந்து ரேஷன் அரிசியை சிலர் விலைக்கு வாங்குவதாக கிடைத்த தகவலின்படி வட்ட வழங்கல் அலுவலர் ரவிச்சந்திரன், தனி வருவாய் ஆய்வாளர்கள் வெங்கடேஷ், ஆனந்த கிருஷ்ணன் பறக்கும் படையினர் அப்பகுதியில் கண்காணிப்பு பணியினை மேற்கொண்டனர்.
அப்போது வந்த காரை சோதனையிட நிறுத்த சைகை காண்பித்தில், டிரைவர் காரை நிறுத்திவிட்டு தப்பினார்.
அதில் 14 பாலிதீன் பைகளில் 678 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டறியப்பட்டது.
ரேஷன் அரிசி சிவகாசியில் உள்ள தமிழ்நாடு அரசு நுகர்வோர் வாணிப கிட்டங்கியில் ஒப்படைக்கப்பட்டது.
கார் விருதுநகர் குடிமைப் பொருள் குற்றப்புலனாய்வு அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. வெம்பக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.