/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ மின் கம்பி உரசியதில் வைக்கோல் லாரி தீப்பற்றி எரிந்து சேதம் மின் கம்பி உரசியதில் வைக்கோல் லாரி தீப்பற்றி எரிந்து சேதம்
மின் கம்பி உரசியதில் வைக்கோல் லாரி தீப்பற்றி எரிந்து சேதம்
மின் கம்பி உரசியதில் வைக்கோல் லாரி தீப்பற்றி எரிந்து சேதம்
மின் கம்பி உரசியதில் வைக்கோல் லாரி தீப்பற்றி எரிந்து சேதம்
ADDED : ஜூலை 10, 2024 06:55 AM

அருப்புக்கோட்டை, : அருப்புக்கோட்டை அருகே வைக்கோல் ஏற்றி சென்ற லாரி மீது மின்வயர் உரசியதில் லாரி முழுவதும் தீப்பற்றி எரிந்து சேதமானது.
அருப்புக்கோட்டை அருகே ஆத்திப்பட்டி திருச்சுழி ரோட்டில் ராமநாதபுரத்தில் இருந்து கேரளாவிற்கு வைக்கோல் ஏற்றிக் கொண்டு சென்று கொண்டிருந்தது.
நேற்று மாலை 4:15 மணிக்கு ரோட்டின் குறுக்கே தாழ்வாக சென்ற மின் வயர் லாரியில் இருந்த வைக்கோல் மீது உரசியதில் தீப்பற்றி எரிந்தது. தீ பற்றியதில் லாரி முழுவதும் எரிந்தது. அருப்புக்கோட்டை, திருச்சுழி தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். லாரி டிரைவர் தப்பி ஓடி விட்டதால் எந்த வித உயிர் சேதமும் இல்லை.
இதனால் ஒரு மணி நேர போக்குவரத்து பாதிப்படைந்தது.
திருச்சுழி ரோட்டில் அளவுக்கதிகமாக வைக்கோல் ஏற்றிச்செல்லும் லாரிகள் அடிக்கடி செல்வதால் இது போன்ற அசம்பாவிதம் நிகழ்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.