ADDED : ஜூலை 10, 2024 06:55 AM
மூவர் தற்கொலை
விருதுநகர்: வீரபத்திரன் தெருவைச் சேர்ந்தவர் மாரிமுத்து 47. இவர் விருதுநகர் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே பாஸ்ட்புட் கடை நடத்தினார். இவர் ஜூலை 7 இரவு 9:00 மணிக்கு துாங்க சென்று ஜூலை 8 காலை நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. உறவினர்கள் மதியம் 12:00 மணிக்கு வீட்டை திறந்து பார்த்த போது துாக்கிட்டு தற்கொலை செய்தது தெரிந்தது. மேற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.
சாத்துார்: சாத்துார் மேட்டமலை சேர்ந்தவர் முத்துமாரி, 49. கூலித் தொழிலாளி. முதுகு வலியால் அவதிப்பட்டு வந்தவர் வீட்டில் யாரும் இல்லாதநேரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் சாத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.
சிவகாசி: சிவகாசி மீனம்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் ஞானசேகரன் 61. வயிற்று வலியால் அடிக்கடி அவதிப்பட்டு வந்த இவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.