ADDED : ஜூலை 07, 2024 11:53 PM
ராஜபாளையம் : ராஜபாளையத்தில் இன்டர்நேஷனல் வயர்லெஸ் ரேடியோ தொடர்பாக சங்கத்தின் ஹேம் ரேடியோ திருவிழா நடந்தது.
பேரிடர் காலங்களில் அனைத்து தகவல் தொடர்பு முறைகள் தோல்வியடைந்தாலும் இவ்வகையான தகவல் தொடர்பு மூலம் அலை்பேசி வேலை செய்யாத இடங்களிலும் இலவசமாக தொடர்பு ஏற்படுத்தி தர முடியும். இரண்டு நாள் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பாண்டிச்சேரி அமைச்சரின் தனிச்செயலாளர் பாஸ்கர் தலைமை வகித்தார்.
ஹேம் ரோடியோ ஸ்டேஷன் செயல்படுவது குறித்தும், வயர்லெஸ் சிக்னல் வருவதை கண்டுபிடிப்பது, சிறப்பு வகை ஆண்டனா தயாரிப்பது பற்றி விளக்க நிகழ்ச்சி நடந்தது. கல்லுாரி முதல்வர் ரமேஷ் குமார் முன்னிலை வகித்தார். ஏற்பாடுகளை ராஜபாளையம் சங்க நிர்வாகிகள் பெத்து ராஜா கழுகுமலை ராஜா உள்ளிட்டோர் செய்திருந்தனர்.