ADDED : ஜூலை 07, 2024 11:53 PM
விருதுநகர்: விருதுநகரில் லயன்ஸ் கிளப் ஆப் விருதுநகர், மாவட்ட பார்வையிழப்பு தடுப்புச் சங்க நிதியுதவியில் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை, ஒய்ஸ் மென்ஸ் கிளப் ஆப் விருதுநகர் இணைந்து டி.வி.எஸ்., நடுநிலைப்பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது.
இந்த முகாமில் கண்புரை, சர்க்கரை நோயாளிகளுக்கு விழித்திரை, கண்நீர் அழுத்த நோய், குழந்தைகளின் கண் நோய் பரிசோதனைகள் செய்யப்பட்டது. இதில் லயன்ஸ் கிளப் தலைவர் ஸ்ரீமான் ரவிநாராயண், செயலாளர் ராஜேந்திரன், ஒய்ஸ் மென்ஸ் கிளப் தலைவர் முத்துசங்கர், செயலாளர் அலெக்சாண்டர் உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.