/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ மழைக்கு சாய்ந்த மின்கம்பம் 4 நாட்களாக மின் சப்ளை இல்லை மழைக்கு சாய்ந்த மின்கம்பம் 4 நாட்களாக மின் சப்ளை இல்லை
மழைக்கு சாய்ந்த மின்கம்பம் 4 நாட்களாக மின் சப்ளை இல்லை
மழைக்கு சாய்ந்த மின்கம்பம் 4 நாட்களாக மின் சப்ளை இல்லை
மழைக்கு சாய்ந்த மின்கம்பம் 4 நாட்களாக மின் சப்ளை இல்லை
ADDED : ஜூன் 05, 2024 02:09 AM

காரியாபட்டி : கிழவனேரியில் பெய்த மழைக்கு மின் கம்பம் சாய்ந்து 4 நாட்களாகியும் சீரமைக்காததால் ஒரு பகுதிக்கு மின் சப்ளை இல்லாததால் மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
காரியாபட்டி பகுதியில் 4 தினங்களுக்கு முன் பலத்த இடி, மின்னல், காற்றுடன் கனமழை பெய்தது. ஆங்காங்கே மரங்கள் சாய்ந்தன. கிழவனேரியில் ரோட்டோரத்தில் இருந்த மின் கம்பம் சாய்ந்தது. மின்சாரம் துண்டிக்கப்பட்டது. தற்போது ஒரு பகுதிக்கு மட்டும் மின்சாரம் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.
மற்றொரு பகுதிக்கு மின் சப்ளை இல்லாததால் மக்கள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
பகலில் வெயில் கடுமையாக இருப்பதால் மின்சாரம் இன்றி மின்விசிறி இயக்க முடியாமல் சிரமப்படுகின்றனர்.
இரவு நேரங்களில் கொசு கடியால் தூங்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
இருளில் நடமாட அச்சப்படுகின்றனர். உடனடியாக சாய்ந்த மின் கம்பத்தை சீரமைத்து மின் சப்ளை வழங்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.