ADDED : ஜூன் 05, 2024 02:58 AM
ஸ்ரீவில்லிபுத்தூர்:விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மம்சாபுரத்தில் ஒன்றரை வயது பெண் குழந்தை வாளியில் இருந்த தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தது.
மம்சாபுரம் மேலூர் காலனி தெருவை சேர்ந்தவர் சுரேஷ் ராஜா 36. இவரது மனைவி கலைவாணி 32. இத்தம்பதிக்கு கனிகா, தியா என இரண்டு பெண் குழந்தைகள் இருந்தனர். திருப்பூரில் வசித்து வந்தனர். கோடை விடுமுறைக்கு சுரேஷ் ராஜா ஸ்ரீவில்லிபுத்தூர் மம்சாபுரம் மேலூர் காலனியில் உள்ள தனது வீட்டிற்கு மனைவி, குழந்தைகளை அழைத்து வந்துள்ளார்.
நேற்று முன்தினம் மதியம் 3:00 மணிக்கு கலைவாணி வீட்டில் மாடியில் அரசு தேர்விற்கு படித்துக் கொண்டிருந்தார். மாமியார் சமையல் அறையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். இந்நிலையில் பாத்ரூமில் இருந்த வாளியில் தலைகுப்புற மூழ்கிய நிலையில் ஒன்றரை வயது குழந்தை தியா கிடந்தது.
ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் பரிசோதனையில் தியா உயிரிழந்ததாக தெரிவித்தனர். மம்சாபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.