/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ ரோட்டில் அபாய பள்ளம்: விபத்து அச்சம் ரோட்டில் அபாய பள்ளம்: விபத்து அச்சம்
ரோட்டில் அபாய பள்ளம்: விபத்து அச்சம்
ரோட்டில் அபாய பள்ளம்: விபத்து அச்சம்
ரோட்டில் அபாய பள்ளம்: விபத்து அச்சம்
ADDED : ஜூலை 14, 2024 04:26 AM

விருதுநகர் : விருதுநகர் ஆத்துமேடு சிவந்திபுரம் பகுதியில் ரோட்டில் வாறுகால் தடுப்பு சுவர் சரிந்து ஏற்பட்ட பள்ளம் ஓராண்டுக்கு மேலாக சரி செய்யப்படாமல் உள்ளதால் குடியிருப்போர் அச்சத்தில் உள்ளனர்.
விருதுநகர் நகராட்சிக்குட்பட்ட ஆத்துமேடு சிவந்திபுரம் பகுதியில் கடந்த ஆண்டு வாறுகால் தடுப்பு சுவர் சரிந்து பள்ளம் ஏற்பட்டது. இந்த பள்ளம் ஒரு ஆள் நிற்கும் அளவிற்கு தற்போது ஆழமாகி விட்டது.
இரவில் போதிய வெளிச்சம் இல்லாத இப்பகுதியில் இப்பள்ளத்தை கவனத்தோடு பார்தது வர வேண்டி உள்ளது. சிறுவர்களை வெளியில் விளையாட பெற்றோர் அனுமதிப்பதில்லை. இந்த பள்ளத்தால் மாதக்கணக்கில் விபத்து அபாயம் உள்ளது. இதை சரி செய்ய நகராட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தற்போது இந்த பள்ளம் மக்களை பெரிய அளவில் அச்சுறுத்தி வருகிறது. குறிப்பாக பாதசாரிகள் நடமாட அச்சப்படும் சூழல் உள்ளது. மக்கள் தொகை பெருக்கம், வாகன பெருக்கத்தால் இந்த ரோடு அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. நகரின் கடைசிப்பகுதியில் இந்த ஆத்துமேடு இருப்பதனாலோ என்னவோ நகராட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளது என மக்கள் தவிக்கின்றனர்.
உடனடியாக பள்ளத்தை சரி செய்து பேட்ஜ் பணிகள் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.