/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ அர்ஜூனா நதியை ஆக்கிரமித்த சீமை கருவேல மரங்கள், கோரைப்புற்கள் அர்ஜூனா நதியை ஆக்கிரமித்த சீமை கருவேல மரங்கள், கோரைப்புற்கள்
அர்ஜூனா நதியை ஆக்கிரமித்த சீமை கருவேல மரங்கள், கோரைப்புற்கள்
அர்ஜூனா நதியை ஆக்கிரமித்த சீமை கருவேல மரங்கள், கோரைப்புற்கள்
அர்ஜூனா நதியை ஆக்கிரமித்த சீமை கருவேல மரங்கள், கோரைப்புற்கள்
ADDED : ஜூலை 14, 2024 04:29 AM

சிவகாசி : சிவகாசி அருகே எம்.புதுப்பட்டி வழியாக செல்லும் அர்ஜூனா நதியில் சீமை கருவேல மரங்கள் கோரைப் புற்கள் நிறைந்துள்ளதால் மழை பெய்தும் தண்ணீர் வரவில்லை என விவசாயிகள் புலம்புகின்றனர். மேலும் கழிவு நீரும் கலப்பதால் குடிநீர் ஆதாரமும் பாதிக்கப்படுகிறது.
சிவகாசி அருகே காளையார்குறிச்சி, எம்.புதுப்பட்டி, சித்தமநாயக்கன்பட்டி உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராமங்களின் வழியாக அர்ஜூனா நதி செல்கிறது. இதனை நம்பி 2000 ஏக்கரில் சோளம், நெல் உள்ளிட்ட பயிர்கள் விவசாயம் செய்யப்படுகின்றது. இப்பகுதியிலுள்ள 20க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும் விளங்குகிறது. ஆனால் நதி முழுவதுமே சீமை கருவேல மரங்கள், கோரைப் புற்கள் அதிகளவில் இடைவெளியின்றி ஆக்கிரமித்துள்ளது. இதனால் மழை சீசனில் மழை பெய்தும் நதி வழியாக தண்ணீர் வர வழியில்லை.
கடந்த சீசனில் இப்பகுதியில் மழை பெய்தும் தண்ணீர் வராததால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. தவிர கழிவு நீரும் கலப்பதால் குடிநீர் ஆதாரமும் பாதிக்கப்படுகிறது. தவிர போர்வேல் அமைத்து விவசாயம் செய்யவும் வழியில்லை. எனவே மழைக்காலம் துவங்குவதற்கு முன் அர்ஜூனா நதியை துார்வாரி, சீமைக் கருவேல மரங்கள், கோரைப் புற்களை அகற்ற வேண்டும் என இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.
சீனிவாசன், விவசாயி, சித்தமநாயக்கன்பட்டி; நிலத்தடி நீரை உறிஞ்சும் தன்மை உடைய சீமைக்கருவேல மரங்கள் நதி முழுவதும் அடர்ந்துள்ளது. கோரைப் புற்களும் அதிக அளவில் காணப்படுகிறது. இதனால் எவ்வளவு மழை பெய்தும் பலனில்லை. பொதுப்பணித்துறையினர் , மாவட்ட நிர்வாகம் நதியினை துார்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.