Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ போலீஸ் செய்திகள்

போலீஸ் செய்திகள்

போலீஸ் செய்திகள்

போலீஸ் செய்திகள்

ADDED : ஜூலை 25, 2024 11:59 PM


Google News
திருட்டு; இளைஞர் கைது

தளவாய்புரம்: சேத்தூர் காமராஜர் நகரை சேர்ந்தவர் ஜெயக்குமார் 37, ஊராட்சி ஆரம்பப்பள்ளி அருகே பிரவுசிங் சென்டர் வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் டிராயரில் ரூ.23,500 பணத்தை வைத்து பூட்டி சென்றவர் காலை வந்து பார்த்தபோது ஷட்டரின் பூட்டு உடைக்கப்பட்டு வைத்திருந்த பணம் திருடு போயிருந்தது. விசாரணையில் நள்ளிரவு அங்கு சுற்றி வந்த அதே பகுதியை சேர்ந்த வன்னிய ராஜ் 20, என்பவரை தளவாய்புரம் போலீசார் கைது செய்துள்ளனர்.

தற்கொலை

சிவகாசி :வடபட்டி மேலுாரை சேர்ந்தவர் காசிராஜன் 48. பட்டாசு தொழிலாளியான இவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள ஓடை அருகே தன் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார். திருத்தங்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.

----மாணவர்கள் காயம்

சிவகாசி: பிருந்தாவன் நகரை சேர்ந்தவர் பெரியசாமி 19. இவர் தனது டூ வீலரில் நண்பர் ரூபன் வேலை 19, ஏற்றிக்கொண்டு கல்லுாரி செல்வதற்காக விருதுநகர் ரோட்டில் சென்று கொண்டிருந்தார் .அப்போது சிவகாசி தென்றல் நகரை சேர்ந்த தங்கப்பாண்டி 54, ஓட்டி வந்த கார் மோதியதில் பெரியசாமி, ரூபன் வேல் காயமடைந்தனர். திருத்தங்கல் போலீசார் விசாரிக்கின்றனர்,

-----பணம் பறிக்க முயற்சி

சிவகாசி: வத்திராயிருப்பு அருகே நத்தம்பட்டி மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் முத்துராம் 27. இவர் நாரணாபுரம் புதுார் ரோட்டில் வரும்போது அதே பகுதியைச் சேர்ந்த செல்வம் 23, வழி மறித்து கத்தியை காட்டி பணம் பறிக்க முயன்றார். அவரை கிழக்கு போலீசார் கைது செய்தனர்.

----லோடுமேன் தற்கொலை

சிவகாசி: திருத்தங்கல் பாண்டியன் நகரை சேர்ந்தவர் லோடுமேன் ரெங்கராஜ் 45. இவரது மனைவி குடும்பச் செலவுக்காக மகளிர் சுய உதவி குழுவில் கடன் வாங்கி இருந்தார். ரெங்கராஜுக்கு உடல் நலம் சரியில்லாததால் வேலைக்கு செல்ல முடியாமல் குழுக்கடனை கட்ட முடியவில்லை. இதனால் மன வருத்தத்தில் இருந்தவர் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திருத்தங்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us