/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ ரோடு சேதம்: குடியிருப்புவாசிகள் அவதி ரோடு சேதம்: குடியிருப்புவாசிகள் அவதி
ரோடு சேதம்: குடியிருப்புவாசிகள் அவதி
ரோடு சேதம்: குடியிருப்புவாசிகள் அவதி
ரோடு சேதம்: குடியிருப்புவாசிகள் அவதி
ADDED : ஜூலை 25, 2024 11:59 PM

சிவகாசி : சிவகாசி அருகே செங்கமல நாச்சியார்புரம் ஊராட்சி கண்ணன் கோயில் தெருவில் ரோடு சேதம் அடைந்திருப்பதால் குடியிருப்புவாசிகள் அவதிப்படுகின்றனர்.
சிவகாசி அருகே செங்கமல நாச்சியார்புரம் ஊராட்சி கண்ணன் கோயில் தெருவில் 300 க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில் 10 ஆண்டுகளுக்கு முன்பு சிமெண்ட் ரோடு போடப்பட்டிருந்தது.
தற்போது இந்த ரோடு முற்றிலும் சேதம் அடைந்து கற்கள் பெயர்ந்து காணப்படுகின்றது. இதில் நடந்து செல்வதற்கே முடியவில்லை. டூவீலர்களில் செல்பவர்கள் அடிக்கடி தடுமாறி கீழே விழுகின்றனர். சிறுவர்கள் தெருவில் விளையாட கூட முடியவில்லை. மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி குடியிருப்புவாசிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.
சில ஆண்டுகளுக்கு முன்பு இங்கு வாறுகால் மட்டுமே அமைக்கப்பட்டது. இது தற்போது தாழ்வாக காணப்படுகின்றது. எனவே இப்பகுதியில் வாறுகாலை உயர்த்தி அமைப்பதோடு உடனடியாக ரோட்டினையும் சீரமைக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.