Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ போலீஸ் செய்திகள்

போலீஸ் செய்திகள்

போலீஸ் செய்திகள்

போலீஸ் செய்திகள்

ADDED : ஜூன் 04, 2024 05:57 AM


Google News
விஷம் குடித்து மனைவியை கத்தியால் குத்திய கணவன் பலி

சிவகாசி: சிவகாசி பாறைப்பட்டி ஐயப்பன் காலனியை சேர்ந்தவர் பெத்தம்மாள் 28. இவரது கணவர் முருகன். திருமணமாகி 12 ஆண்டுகள் ஆன நிலையில் 11, 8 வயதில் இரு பெண் குழந்தைகள் உள்ளனர். முருகன் கேரளாவில் வேலை பார்த்து வந்தார். இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில் பெத்தம்மாள் தனது குழந்தைகளுடன் மூன்று மாதங்களாக நாரணாபுரத்தில் உள்ள தனது அம்மா வீட்டில் இருந்தார். இந்நிலையில் மே 31ல் விஷம் குடித்து விட்டு வந்த முருகன், பெத்தம்மாளை கத்தியால் குத்தினார். பெத்தம்மாள் சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட முருகன் இறந்தார். கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.

அணையில் உடல்

விருதுநகர்: சிவகாசி ஆனைக்குட்டம் அகதிகள் முகாமை சேர்ந்தவர் லோகேந்திரன் 21. இவர் நேற்று முன்தினம் மாலை 5:30 மணிக்கு அருகே உள்ள ஆனைக்குட்டம் அணையில் குளிக்க சென்றுள்ளார். நேற்று காலை வரை வீடு திரும்பாததால் தாய் வசந்தக்குமாரி தேடினார். அப்போது அணை நீரில் சடலமாக கிடந்தார். ஆமத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.

மின் வயர் அறுந்து விழுந்து தந்தை மகள் காயம்

சிவகாசி: சிவகாசி திருத்தங்கல் கே.கே., நகரை சேர்ந்தவர் சாந்தகுமார் 36. இவர் தனது 9 வயது மகளுடன் சத்யா நகரில் டூவீலரில் சென்று கொண்டிருந்தார். அப்போது சீர்காழி மேல சாலையைச் சேர்ந்த செந்தில் 42, ஓட்டி வந்த கண்டெய்னர் லாரி உரசியதில் மின் வயர் அறுந்தது. இந்த வயர் டூவீலரில் வந்த சாந்தகுமார் மீது விழுந்ததில் அவரும் அவரது மகளும் கீழே விழுந்து காயமடைந்தனர். திருத்தங்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.-

ஆடு திருட்டு

சாத்துார்: சாத்துார் படந்தால் கிராமத்தை சேர்ந்தவர் குமார், 42.2 ஆடுகள் வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு ஆடுகளை வீட்டின் வாசலில் கட்டி போட்டுவிட்டு வீட்டிற்குள் உறங்கினார். காலையில் எழுந்து பார்த்த போது ஒரு வெள்ளாடு மாயமாகியிருந்தது.சாத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.

கோஷ்டி மோதல்: 22 பேர் மீது வழக்கு

சாத்துார்: மஞ்சள் ஓடைப்பட்டியை சேர்ந்தவர் கந்தசாமி, 52. அதே ஊரை சேர்ந்தவர் பேரன் புரூக், 40. இருவரின் குடும்பத்திற்கும் முன் பகை இருந்துள்ளது. நேற்று முன்தினம் இரு குடும்பத்தினருக்கும் இடையில் கோஷ்டி மோதல் நடந்தது. இரு தரப்பினரும் கம்பு, கட்டை, அரிவாளால் தாக்கிக் கொண்டனர். கந்தசாமி மனைவி கருப்பாயி, 50. பேரன்புருக் சகோதரர் சமுத்திரக்கனி, 42. காயமடைந்தனர். ஏழாயிரம்பண்ணை போலீசார் இரு தரப்பையும் சேர்ந்த 22 பேர் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us