Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ கருணாநிதி பிறந்தநாள் விழா

கருணாநிதி பிறந்தநாள் விழா

கருணாநிதி பிறந்தநாள் விழா

கருணாநிதி பிறந்தநாள் விழா

ADDED : ஜூன் 04, 2024 05:57 AM


Google News
Latest Tamil News
சிவகாசி : சிவகாசி, திருத்தங்கலில் மாநகர தி.மு.க., சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 101 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

மாநகர செயலாளர் உதயசூரியன் தலைமையில், மேயர் சங்கீதா முன்னிலையில் சிவகாசி, திருத்தங்கலில் கருணாநிதி உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. சிவகாசியில் இளைஞரணி சார்பில் மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

கட்சி நிர்வாகிகள் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். இதேபோல் ஒன்றிய தி.மு.க., சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதி 101 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

* விருதுநகரில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

தி.மு.க., சார்பில் விருதுநகர் தேசப்பந்து மைதானத்தில் எம்.எல்.ஏ., சீனிவாசன் தலைமையில், நகராட்சி தலைவர் மாதவன் முன்னிலையில் கருணாநிதி உருவ படத்திற்கு மலர்த்துாவி மரியாதை செலுத்தப்பட்டது. நகரச்செயலாளர் தனபாலன் பங்கேற்றார். இனிப்புகள் வழங்கப்பட்டன.

வடக்கு மாவட்ட தி.மு.க., இளைஞரணி சார்பில் அதன் அமைப்பாளர் கிருஷ்ணகுமார் ஏற்பாட்டில் விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை முன் அசைவ உணவு வழங்கப்பட்டது. மரக்கன்றுகள் நடப்பட்டன. அரசு போக்குவரத்து பணிமனை முன்பு தொ.மு.ச., மண்டல செயலாளர் ராஜா செல்வம் தலைமையில் மலர்த்துாவி மரியாதை செலுத்தப்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us