ADDED : ஜூன் 04, 2024 05:58 AM
ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா நாக பாளையத்தில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஈஷா காவேரி கூக்குரல் இயக்கத்தின் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.
ஈஷா காவேரி கூக்குரல் இயக்கத்தின் சார்பில் ஸ்ரீவில்லிபுத்தூர் நாகபாளையம் கிராமத்தில் பெருமாள் சாமியின் நிலத்தில் இருந்த கருவேல மரங்களை அகற்றி விட்டு 1 ஆயிரத்து 500 பல்வகை மரக்கன்றுகள் நடும் பணி நேற்று நடந்தது. ஒன்றிக்குழு தலைவர் மல்லி ஆறுமுகம், கவுன்சிலர் கிருஷ்ணவேணி தலைமையில் மரக்கன்றுகள் நடப்பட்டது.
விவசாயிகள் பொதுமக்கள் மரம் நடுவதற்கும், தொடர்ந்து பராமரிப்பிற்கும், தொழில்நுட்ப உதவிகளை காவேரி கூக்குரல் இயக்கம் இலவசமாக செய்து வருகிறது. மேலும் மரக்கன்றுகள் தேவைக்கு 80009- 80009 என்ற அலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என நிர்வாகிகள் தெரிவித்தனர்.