Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ போலீஸ் செய்திகள்..

போலீஸ் செய்திகள்..

போலீஸ் செய்திகள்..

போலீஸ் செய்திகள்..

ADDED : ஜூன் 01, 2024 04:05 AM


Google News
தெப்பத்தில் மூழ்கி பலி

சிவகாசி: நேஷனல் காலனியைச் சேர்ந்தவர் அண்ணா மலைச்சாமி 42. 10 ஆண்டுகளாக மனநலம் பாதித்த இவர் வீட்டில் வசிக்காமல் வெளியில் திரிந்து வந்தார். இந்நிலையில் சிவகாசி பன்னீர் தெப்பத்தில் இறங்கியவர் தண்ணீரில் மூழ்கி இறந்தார். டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.-----

வாலிபர் மீது தாக்குதல்

சிவகாசி: அனுப்புன்குளம் வடக்கு தெருவை சேர்ந்தவர் பாண்டி 35. இவருக்கும் இவரது மனைவிக்கும் பிரச்சனை ஏற்பட்டு பிரிந்து இருந்தவர்கள் கடந்த ஒன்றரை மாதமாக சேர்ந்து இருந்தனர். மீண்டும் சண்டை ஏற்படவும் பாண்டி அனுப்பங்குளத்தில் உள்ள வீட்டில் தங்கி இருந்தார். அங்கு வந்த விஸ்வநத்தம் பசும்பொன், செண்பகவள்ளி மற்றும் இருவர் கல்லால் அடித்தனர் . கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.-----

இளம் பெண்கள் மாயம்

சிவகாசி: திருத்தங்கள் மேல ரத வீதியை சேர்ந்தவர் மாரிமுத்து மகள் ஸ்ரீவித்யா லட்சுமி 20. கல்லுாரி படிப்பை பாதியில் நிறுத்திய இவர் பேக்கேஜிங் கம்பெனியில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் வேலைக்குச் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. திருத்தங்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.

* சிவகாசி புதுக்கோட்டை அக்ரஹாரம் தெருவை சேர்ந்தவர் மனோகரன் மகள் சுவேதா 20. இவர் அதே பகுதியைச் சேர்ந்த ஒருவரிடம் பழகி வந்த நிலையில் பெற்றோர் அறிவுரை கூறியிருந்தனர். இந்நிலையில் வீட்டை விட்டு வெளியே சென்ற சுவேதா வீடு திரும்பவில்லை. எம்.புதுப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.-----

வாலிபர் காயம்

சிவகாசி: திருத்தங்கல் கணேசன் காலனியைச் சேர்ந்தவர் செல்வம் 28. இவர் தனது டூவீலரில் ஆலங்குளம் ரோட்டில் சின்ன பொட்டல்பட்டி விலக்கு அருகே சென்றபோது எதிரே வந்த வாகனத்தில் மோதி விடாமல் இருப்பதற்காக தனது டூவீலரை திருப்பியபோது கட்டுப்பாட்டை இழந்து ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தள்ளு வண்டியில் மோதி காயமடைந்தார். விருதுநகர் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லுாரியில் சேர்க்கப்பட்டார். மாரனேரி போலீசார் விசாரிக்கின்றனர்.---

வியாபாரி பலி

சாத்துார்: சாத்துார் அருகே சல்வார் பட்டியை சேர்ந்தவர் ஆடு வியாபாரி கருப்பசாமி, 60. நேற்று காலையில் சிவகாசி சென்று விட்டு இருசக்கரவாகனத்தில் (ஹெல்மெட் அணியவில்லை) ஊர் திரும்பினார்.

மேட்டமலை அருகே காலை 9:00 மணிக்கு வந்தபோது அவர் பின்னால் சிவகாசியில் இருந்து கோவில்பட்டிக்கு சென்றதனியார் பஸ் டூ வீலர் மீது மோதியது.

இதில் பின்சக்கரம் கருப்பசாமி தலையில் ஏறி இறங்கியதில் தலை நசுங்கி சம்பவஇடத்தில் பலியானார். சாத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us