ADDED : ஜூன் 01, 2024 04:05 AM
ராஜபாளையம்: ராஜபாளையம் மலையடிபட்டியைச் சேர்ந்தவர் தியாகராஜன் 69, தனியார் மில் அலுவலர்.
நேற்று மாலை 5:00 மணி அளவில் மதுரை ரோடு பெட்ரோல் பங்க் அருகே டூவீலரில் வந்துகொண்டிருந்தபோது முன்னால் சென்ற லாரி வேகம் குறைத்த போது நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். எதிரே வந்த கார் தியாகராஜன் மீது மோதியதில் (ஹெல்மெட் அணிந்திருந்தார்) சம்பவ இடத்தில் உயிரிழந்தார். வடக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.