/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ ராஜபாளையத்தில் மீண்டும் முளைக்கும் பிளக்ஸ் போர்டுகள்---- ராஜபாளையத்தில் மீண்டும் முளைக்கும் பிளக்ஸ் போர்டுகள்----
ராஜபாளையத்தில் மீண்டும் முளைக்கும் பிளக்ஸ் போர்டுகள்----
ராஜபாளையத்தில் மீண்டும் முளைக்கும் பிளக்ஸ் போர்டுகள்----
ராஜபாளையத்தில் மீண்டும் முளைக்கும் பிளக்ஸ் போர்டுகள்----
ADDED : ஜூன் 01, 2024 04:06 AM

ராஜபாளையம்,: ராஜபாளையத்தில் கடந்த வாரம் அகற்றப்பட்ட பிளக்ஸ் போர்டுகள் மீண்டும் முளைக்க தொடங்கியுள்ளதை அதிகாரிகள் பராமுகமாக இருப்பதால் மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.
நெடுஞ்சாலைகள், மக்கள் கூடும் இடங்களில் விளம்பர பதாகைகள், பிளக்ஸ் போர்டுகள் வைப்பதற்கு நீதிமன்றம் பல்வேறு விதிமுறைகளை விதித்துள்ளது.
இதையும் மீறி வைக்கப்பட்ட பிளக்ஸ் போர்டுகளால் உயிரிழப்பு அடிக்கடி நிகழ்ந்து கொண்டு இருக்கின்றன. வாகன ஓட்டிகளின் கவனச்சிதறல்களுக்கு காரணமாகவும் காற்றில் இவை சாய்ந்து உயிர் பலி, காயங்கள் ஏற்படும் என்பதால் இக்கட்டுப்பாடு எழுந்துள்ளது.
கடந்த வாரம் மும்பையில் 10ற்கும் மேற்பட்டோர் காற்றில் விளம்பர பலகை சரிந்து உயிர்பலி ஏற்பட்டதும் தமிழகம் முழுவதும் இருந்த அனுமதி பெறாத பிளக்ஸ் போர்டுகள் அகற்றப்பட்டது.
அதில் ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலை சந்திப்புகளிலும், மெயின் ரோடுகளிலும் வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் போர்டுகள் அகற்றப்பட்டு இரண்டு நாட்கள் பளிச்சென இருந்தன. இந்நிலையில் ராஜபாளையம் காந்தி சிலை ரவுண்டானா உள்ளிட்ட பகுதிகளில் மீண்டும் போர்டுகள் வைக்க தொடங்கி உள்ளனர்.
இதனால் நகரின் மெயின் ரோடு தன் பொலிவை இழக்க தொடங்கியுள்ளது.
விதிமுறைகளை மீறி வைக்கப்பட்டவைகளை நகராட்சி அதிகாரிகளும், போலீசாரும் அகற்றாமல் இருப்பதால் மக்கள் விரக்தியடைந்துள்ளனர்.
மாவட்ட நிர்வாகம் அனுமதியின்றி பிளக்ஸ் வைப்பவர்கள் மீது் கடும் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இது போன்ற சம்பவங்கள் மேலும் நடப்பதை தடுக்க முடியும்.