/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ விஷம் குடித்துவிட்டு மனைவியை கத்தியால் குத்திய கணவர் விஷம் குடித்துவிட்டு மனைவியை கத்தியால் குத்திய கணவர்
விஷம் குடித்துவிட்டு மனைவியை கத்தியால் குத்திய கணவர்
விஷம் குடித்துவிட்டு மனைவியை கத்தியால் குத்திய கணவர்
விஷம் குடித்துவிட்டு மனைவியை கத்தியால் குத்திய கணவர்
ADDED : ஜூன் 01, 2024 04:04 AM
சிவகாசி: சிவகாசி பாறைப்பட்டி ஐயப்பன் காலனியை சேர்ந்தவர் பெத்தம்மாள் 28. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த முருகனுக்கும் திருமணமாகி 12 ஆண்டுகள் ஆன நிலையில் 11, 8 வயதில் இரு பெண் குழந்தைகள் உள்ளனர். முருகன் கேரளாவில் வேலை பார்த்து வருகிறார்.
இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில் பெத்தம்மாள் தனது குழந்தைகளுடன் மூன்று மாதங்களாக நாரணாபுரத்தில் உள்ள தனது அம்மா வீட்டில் இருந்தார்.
இந்நிலையில் விஷம் குடித்து விட்டு வந்த நாரணாபுரம் வந்த முருகன், பெத்தம்மாளை தகாத வார்த்தை பேசி கத்தியால் குத்தினார். முருகன் விருதுநகர் அரசு மருத்துவமனையிலும், பெத்தம்மாள் சிவகாசி அரசு மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டனர். கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.