ADDED : ஜூலை 19, 2024 06:16 AM
விருதுநகர் : விருதுநகரில் மாவட்ட அளவிலான ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் சென்னை ஓய்வூதிய இயக்குனரக இணை இயக்குனர் கமலநாதன் முன்னிலையில், கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் நடந்தது.
இதில் 38 மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் விவாதிக்கப்பட்டு உரிய பதிலும், தீர்வும் காணப்பட்டது. டி.ஆர்.ஓ., ராஜேந்திரன், முதுநிலை கண்காணிப்பாளர் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.