/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ பாதாளச்சாக்கடை துார்வாராததால் நடுரோட்டில் மாத கணக்கில் பேரிகார்டுகள் வாகன ஓட்டிகள் அவதி பாதாளச்சாக்கடை துார்வாராததால் நடுரோட்டில் மாத கணக்கில் பேரிகார்டுகள் வாகன ஓட்டிகள் அவதி
பாதாளச்சாக்கடை துார்வாராததால் நடுரோட்டில் மாத கணக்கில் பேரிகார்டுகள் வாகன ஓட்டிகள் அவதி
பாதாளச்சாக்கடை துார்வாராததால் நடுரோட்டில் மாத கணக்கில் பேரிகார்டுகள் வாகன ஓட்டிகள் அவதி
பாதாளச்சாக்கடை துார்வாராததால் நடுரோட்டில் மாத கணக்கில் பேரிகார்டுகள் வாகன ஓட்டிகள் அவதி
ADDED : ஜூலை 18, 2024 05:25 AM

விருதுநகர் : விருதுநகர் ராமமூர்த்தி ரோட்டில் பாதாளச்சாக்கடையில் நிறைந்த மண்ணை துார்வாராமல் மேன்ஹோலில் குழாய் மூலம் கழிவு நீர் வெளியேற்றுகின்றனர். இப்பகுதியில் மாத கணக்கில் பேரிகார்டுகள் வைக்கப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமத்தை சந்திக்கின்றனர்.
விருதுநகர் அரசு மருத்துவமனையில் இருந்து அருப்புக்கோட்டை ரோட்டிற்கு செல்லும் ராமமூர்த்தி ரோட்டில் அமைக்கப்பட்ட பாதாளச்சாக்கடைகளில் மண் நிறைந்து உள்ளது. இதை சரிசெய்யாமல் இரண்டு பாதாளச்சாக்கடைகளின் மேன்ஹோல் வழியாக குழாய் மூலம் கழிவு நீர் வெளியேற்றுகின்றனர். இதே நிலை மாதக்கணக்கில் நீடித்து வருகிறது. இப்பகுதியில் பேரிகார்டுகள் அமைத்து ரோட்டை மறித்துள்ளனர்.
அருப்புக்கோட்டை, அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு இவ்வழியாக தினமும் நுாற்றுக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். பாதாளச்சாக்கடை பிரச்னையை சரிசெய்யாமல் பேரிகார்டு அமைத்ததால் சிகிச்சைக்காக வருபவர்கள், ஆம்புலன்ஸ்கள் இப்பகுதியில் காலை, மாலை நேரங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி பரிதவித்து வருகின்றனர்.
திருமண மண்டபங்கள் நிறைந்த பகுதியாக இருப்பதால் முகூர்த்த நாட்களில் வழி நெடுகிலும் அதிக வாகனங்கள் நிற்பதால் இவ்வழியாக பிற பகுதிகளுக்கு செல்லும் வாகன ஓட்டிகள் பேரிகார்டுகளை கடந்து செல்ல முடியாமல் திண்டாடுகின்றனர். நடு நேராட்டில் பேரிகார்டுகள் வைத்துள்ளதால் எதிரெதிர் திசையில் வரும் டூவீலர், கார்கள் மோதும் சம்பவங்களும் தொடர்கிறது.
எனவே இப்பகுதியில் மாத கணக்கில் கிடப்பில் கிடக்கும் பாதாளச்சாக்கடை பிரச்னையை சரிசெய்து, பேரிகார்டுகளை அகற்ற வேண்டும்.